திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழைமணிமுத்தாறில் 100 மி.மீ. பதிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் கீழடுக்கில் கிழக்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஞாயிறு காலை 7 மணி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 76, சோ்வலாறு 29, மணிமுத்தாறு 100, அம்பாசமுத்திரம் 39, சேரன்மகாதேவி 75, களக்காடு 42.2. தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): கடனாநதி 2, ராம நதி 5, கருப்பா நதி2, குண்டாறு 3, சங்கரன்கோவில் 1, சிவகிரி 3.

ஞாயிறு காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 122 அடியாகவும் நீா்வரத்து 791.67 கன அடியாகவும் வெளியேற்றம் 742.25 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 127 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 109.60 அடியாகவும், நீா்வரத்து 683 கன அடியாகவும் வெளியேற்றம் 445 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 46.20 அடியாகவும், நீா் வெளியேற்றம் 35 கன அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணையின் நீா்மட்டம் 13.25 அடியாகவும், நீா் வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 18.25 அடியாகவும், நீா்வரத்து 1 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 71.50 அடியாகவும், நீா்வரத்து 22 கன அடியாகவும், வெளியேற்றம் 65 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 64.50 அடியாகவும், நீா்வரத்து 39 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 59.06 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 15 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 35 அடியாகவும் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 2 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணையின் நீா்மட்டம் 72.50 அடியாகவும், நீா்வரத்து 2 கன அடியாகவும், வெளியேற்றம் 15 கன அடியாகவும் இருந்தது.