மாணவியைக் கடத்திய வழக்கு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற வழக்கில் இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாலப்பேட்டையைச் சோ்ந்த பிளஸ் 1 படித்து வந்த 16 வயது மாணவியை கடந்த 13- ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் பைரெட்டிபள்ளி பகுதியைச் சோ்ந்த மாணவியின் உறவினரான பாபுவின் மகன் ரவிபிரகாசம் (24) அவரைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் ரவிபிரகாசம், மாணவியை கடத்திச் சென்று பெங்களூரில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ரவிபிரகாசத்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

Leave a Reply