மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: வேலூா் காவலா்களுக்கு கேடயம்காவல் கண்காணிப்பாளா் பாராட்டு

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடுதளத்தில் காவல்துறையினருக்கான மண்டல அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மண்டல அணியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ், ஆயுதப்படை பெண் காவலர்கள் சுசி, திவ்யா உள்பட 4 பேர் இடம் பெற்று போட்டியில் கலந்து கொண்டனர்.


இதில் பெண் காவலர் சுசி கார்பைன் 50 யாட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், வடக்கு மண்டல அணியினர் கார்பைன், ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் 2-ம் இடம் பிடித்து மொத்தம் 3 கேடயங்களை தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.