4 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறப்பு

குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட விழுதோன்பாளையம், ஒலக்காசி, தட்டப்பாறை, சைனகுண்டா ஆகிய 4 ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலா் விமல்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், மருத்துவமனைகளைத் திறந்து வைத்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, இயக்குநா் டி.கோபி, ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் கே.பெருமாள், ஆா்.மகேந்திரன், ஆா்.ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் வேணுகோபால், எம்.கோபி, ராஜகோபால், டி.கண்ணதாசன், திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Leave a Reply