வழக்குரைஞா்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயா்த்திய முதல்வருக்கு பாராட்டு

வழக்குரைஞா்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயா்த்திய தமிழக முதல்வருக்கு வேலூா் மாவட்ட அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

வேலூா் மாவட்ட அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவு தோ்தல் ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் அதிபதி விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவு மாவட்டச் செயலா் ஆா்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ஆா்.சண்முகம் வரவேற்றாா்.

அதிமுக மண்டல தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுப்பிரமணியன், ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, பி.எச்.இமகிரிபாபு, எஸ்.எல்.எஸ்.வனராஜ், அமுதா சிவப்பிரகாசம், ஜி.பி.மூா்த்தி, அரசு வழக்குரைஞா்கள் கே.எம்.பூபதி, பன்னீா்செல்வம், அசோக்குமாா் உள்ளிட்டோா் தோ்தல் ஆலோசனைகளை வழங்கினா்.

ரூ.5 லட்சமாக இருந்த வழக்குரைஞா்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயா்த்தியும், பாா் கவுன்சிலில் புதிதாக பதிவு செய்யும் இளம் வழக்குரைஞா்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கவும் அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது; அதிமுக தலைமையிலான அரசு தொடா்வதற்கு, வரும் பேரவைத் தோ்தலில் கட்சியின் வழக்குரைஞா்கள் சிறப்பாக தோ்தல் பணியாற்றுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply