லால்குடியில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு

லால்குடியில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய புதிய அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது. விழாவுக்கு லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன்(லால்குடி தெற்கு),

சிவக்குமார்(புள்ளம்பாடி தெற்கு), முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அலுவலகத்தை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்து பேசினார். 

அப்போது அவர், லால்குடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள், காரணங்கள் கூறப்படுகின்றன. கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் தள்ளுபடியில் அ.தி.மு.க.வினரைவிட தி.மு.க.வினர் தான் அதிகளவில் பயனடைந்துள்ளனர்.

அதற்கு ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க. முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி திசை திருப்புகிறார் என்றார்.