வேலூரில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

வேலூர் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள 20-க்கும் மேற்ப்பட்ட கடைகளில் திடீரென சோதனை செய்தனர்.


 அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டீ கப்புகள், தெர்மாக்கோல் தட்டுகள் உள்பட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.